புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2015

மரண தண்டனை நியமிக்கப்பட்டுள்ளவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை- இலங்கைக்கான தூதுவர்


சவூதி அரேபியாவில் கல் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பணிப்பெண்ணை சந்திப்பதற்காக அந்த நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால் சிறப்பு குழுவொன்று அனுப்பபட்டுள்ளது.
சவூதி அரோபியா ரியாத் நகரிலுள்ள இலங்கைக்கான தூதுவர் அஸ்மி தாசீம் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த குழு நாளை குறித்த இலங்கை பணிப்பெண், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு சென்று பிரச்சினைகளை ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சவூதி அரோபியாவில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும், அவ்வாறு மரண தண்டனை நியமிக்கப்பட்டுள்ளவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார்.
தகாத முறையில் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலே குறித்த இலங்கை பணிப் பெண்ணுக்கு கல்எறிந்து மரண தண்டனை நிறைவேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

ad

ad