புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2015

வெள்ளப் பாதிப்புக்குள்ளான தமிழக மக்களுக்கு உதவுவதற்கான நிதியம் உருவாக்கம்

தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவுவதற்கான நிதியம் ஒன்றை வடமாகாணசபை இன்றைய தினம் உருவாக்கியுள்ளதுடன், குறித்த நிதியத்திற்கான உதவிகளை வழங்குமாறு வடமாகாணசபை உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் முதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்த நிலையில் தமிழகம் முழுவதும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான நிதியம் ஒன்றை அமைப்பதற்கான கூட்டம் இன்று வடமாகாணசபையில் மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்த அவைத்தலைவர், வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தமிழக மக்கள் வழங்கிய அளப்பரிய உதவிகளையும், தியாகங்களையும் நினைவுகூர்ந்த அவைத்தலைவர் அத்தகைய தியாகங்களுக்கும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றிக்கடனாக இந்த உதவியை நாம் செய்யவேண்டும் என சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து குறித்த நிதியம் தொடங்கப்பட்டதுடன் நிதியத்திற்கான வங்கி கணக்கு நாளைய தினம் ஆரம்பிக்கப்படும் எனவும். இதற்கு உதவிகளை வழங்குவோர் தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக பேணப்படும் எனவும். சுட்டிக்காட்டப்பட்டது.

ad

ad