புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 ஜன., 2016

முல்லைத்தீவில் இருந்து 106 காவற்துறையினர் திடீர் இடமாற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 106 பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீரென இடமாற்றப்படவுள்ளதாகவும் பதிலுக்கு வேறு மாவட்டத்தில் இருந்து 106 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு நகரில் இருந்து 85 பேரும் முள்ளியவளையில் இருந்து 21பேரும், நாளை விசேட பிரியாவிடையுடன் இடமாறவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் நன்மை கருதி ஒவ்வொரு வருடமும் இவ்வாறான இடமாற்றம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.