புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2016

உயர்தரப்பரீட்சை!- கலைப்பிரிவில் குருநாகல் மாணவி முதலிடம்! வர்த்தகப் பிரிவில் குருநாகல் மாணவனுக்கு முதலிடம்

2015ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின் மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
ஜீவா நயனமாலி என்ற மாணவியே கலைப்பிரிவில் முதல் இடம்பெற்றுள்ளார்.
உயர்தரப்பரீட்சை வர்த்தகப்பிரிவில் குருநாகல் மாணவனுக்கு முதலிடம்
2015 ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி வர்த்தக பிரிவில் முதலிடத்தை குருநாகல் மலியதேவ வித்தியாலம் பெற்றுள்ளது

இதன்படி மலியதேவ வித்தியாலயத்தின் மாணவரான எப் எம் அகில் மொஹமட் என்ற மாணவர் வர்த்தப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்
2015ம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியான இரண்டாம் இடத்தை புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் மாணவர் ஜே எம் மொஹமட் முன்சிப் பெற்றுள்ளார்.
மூன்றாம் இடத்தை கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் வத்சலா சிறிவர்த்தன பெற்றுள்ளார்.
கணிதப்பிரிவில் இரண்டாம் இடத்தை குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தின் தனஞ்செய திஸாநாயக்க பெற்றுள்ளார்.
மூன்றாம் இடத்தை இரத்தினபுரி, சிவலி மத்திய கல்லூரியின் சச்சித் கஸ்தூரியாராச்சி பெற்றுள்ளார்.
வர்த்தகப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை கொழும்பு தேவிபாலிகா வித்தியாலயத்தின் சதனி இரங்கா வித்தானகே பெற்றுள்ளார்.
மூன்றாம் இடத்தை மொரட்டுவை சென் செபஸ்தியன் கல்லூரியின் ரன்தி ரமேஸ் சில்வா பெற்றுள்ளார்

ad

ad