புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2016

நாஞ்சில் சம்பத் பதவியை பறித்தார் ஜெயலலிதா: காரணம் என்ன


அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத், கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சி சார்பில் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்து வந்த இவர், தனியார் தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

அந்த வகையில் சனிக்கிழமை தனியார் தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியின்போது, வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது என்று பதில் சொன்னார். 

தந்தி தொலைக்காட்சியில், கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். அதன் ப்ரமோ வீடியோ அத்தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. சென்னையை பெருவெள்ளம் புரட்டி போட்ட பிறகு பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக, கொண்டாட்டமாக நடந்தது சரியா என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே என்று கேள்விக்கு, 'எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காம இருக்க முடியுமா' என்று நாஞ்சில் சம்பத்பதில் சொல்லும் காட்சியும் காண்பிக்கப்பட்டது. 

வெள்ளத்தில் உயிரிழந்த 500 பேரை ஏன் கண்டுகொள்ளவில்லை, அதிமுக பொதுக்குழுவில் அதுதொடர்பாக ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்ற கேள்விக்கு, தேவையில்லை, நிறைவேற்றவில்லை என்று நாஞ்சில் பதிலளிப்பது போல காட்சி ஒளிபரப்பானது. இதுவே பதவி பறிப்புக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகின்றன.

ad

ad