புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 ஜன., 2016

நான் எப்­போது உயி­ரி­ழப்பேனென்று எதிர்­பார்த்திருக்கும் சதி­கா­ரர்­கள்

தேர்­தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்­து­வ­தற்­காக எனது ஜாத­கத்தை எடுத்­துக்­கொண்டு அங்கும் இங்கும் சுற்றித் திரி­கின்­றனர்.
என்­னு­டைய உயிர் எப்­போது பிரியும் என்­பதை என்­னு­டைய ஜாத­கத்­தி­லி­ருந்து ஆராய்ந்து தேடும் அள­விற்கு சதி­கா­ரர்­களின் நிலைமை மாறி­யுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.
தற்­போ­தைய அர­சாங்­கத்தை எவ்­வாறு கவிழ்ப்­பது என்று சிலர் கணக்கு போ­டு ­கின்­றனர். மேலும் சிலர் மன­திலும் எண்­ணு­வ­துடன், பரப்­பு­ரையும் செய்­கின்­றனர். எமக்கு எதி­ராக செயற்­ப­டு­பவர்­களை எண்ணி அர­சியல் ரீதி­யாக அவர்­க­ளுக்கு அனு­தாபம் தெரி­விக்­கின்றேன். அடுத்த ஐந்து வருடம் வரைக்கும் எமது அர­சாங்­கத்­துக்கு கால அவ­காசம் உள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
இலங்கை மின்­சார சபை ஊழியர்கள் 2300 பேருக்கு நிரந்­தர நிய­மனம் வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் பத்­த­ர­முல்லை பி.எச் புத்­த­தாஸ விளை­யாட்டு அரங்கில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அங்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­கையில்,
ஒரு வரு­டத்­திற்கு முன்னர் நிரந்­தர நிய­ம­னத்தை வழங்­கு­மாறு கோரி மின்­சார சபை ஊழி­யர்கள் அனை­வரும் ஒன்று கூடி போராட்­டத்தில் ஈடு­பட்­ட­போது உங்­க­ளு­டைய பிரச்­சினை தீர்ப்பேன் என்று பொது வேட்­பா­ள­ராக நான் அன்று வாக்­கு­றுதி வழங்­கினேன்.
இந்­நி­லையில் தேர்­தலின் போது வாக்­கு­றுதி வழங்­கி­விட்டு அதனை மீறும் வகையில் அர­சாங்­கங்கள் செயற்­ப­டு­வது குறித்து அவ­தா­னத்­துள்ளோம். இருந்­த­போ­திலும் எங்­க­ளது புதிய அர­சாங்கம் ஒரு வருடம் கூட பூர்த்­தி­யா­காத அர­சாங்­க­மாகும். ஆகஸ்ட 17 ஆம் திகதி ஆட்சி பீட­மேறி இது­வ­ரைக்கும் குறைந்­தது ஒரு வருடம் கூட நான்கு மாதங்­களே ஆகின்­றன. எனினும் அர­சியல் மேடை­க­ளிலும் பாரா­ளு­மன்­றத்­திலும் ஊட­கங்­க­ளிலும் பல­வாறு விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றனர்.
இந்த அர­சாங்கம் நீண்­ட­காலம் நிலைத்து நிற்க முடி­யாது என்­றெல்லாம் எதி­ர­ணி­யினர் கூறு­கின்­றனர். தற்­போ­தைய அர­சாங்கம் கவிழ்க்­கப்­ப­டு­வ­தாக மனதில் எண்­ணு­வோ­ரையும் பரப்­புரை செய்­வோ­ரையும் எண்ணி அர­சியல் ரீதி­யாக அவர்­க­ளுக்கு கவலை தெரி­விக்­கின்றேன்.
தற்­போ­தைய அர­சாங்­கத்தை எவ்­வாறு கவிழ்ப்­பது என்று சிலர் கணக்கு போட்டு பார்க்­கின்­றனர். மேலும் சிலர் மன­திலும் எண்­ணு­கின்­றனர். அர­சியல் மேடைகள் வாயி­லாக பரப்­பு­ரையும் செய­கின்­றனர். எமக்கு எதி­ராக செயற்­ப­டு­பர்­களை எண்ணி அர­சியல் ரீதி­யாக அவர்­க­ளுக்கு அனு­தாபம் தெரி­விக்­கின்றேன்.
அது­மாத்­தி­ர­மின்றி தேர்­தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்­து­வ­தற்­காக எனது ஜாத­கத்தை ஆராயத் தொடங்­கி­யுள்­ளனர். எனது ஜாத­கத்தை எடுத்­துக்­கொண்டு அங்கும் இங்கும் சுற்றி திரி­கின்­றனர். எப்­போது என்­னு­டைய உயிர் பிரியும் என எனது ஜாத­கத்தை ஆராய்ந்து தேடும் அள­வுக்கு சதிக்­கா­ரர்­களின் நிலைமை மாறி­யுள்­ளது. இத்­த­கைய நபர்கள் அர­சியல் ரீதி­யாக கீழ் நிலைக்கு தள்­ளப்­பட்­ட­வர்­க­ளாகும்.
ஜன­வரி எட்டாம் ஆம் திகதி ஆட்சி மாற்­றத்­திற்கு ஒன்று சேரும் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யிடம் 47 உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே இருந்­தனர். மேலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யிடம் 142 ஆச­னங்கள் காணப்­பட்­டன. இந்­த­கைய நிலை­மை­யி­லேயே 100 நாள் அர­சாங்­கத்தை நாம் ஏற்­றுக்­கொண்டு சர்­வ­தேச அர­சியல் வர­லாற்றில் சிறு­பான்மை பலம் கொண்ட அர­சாங்­கத்தை வைத்­துக்­கொண்டு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையின் அதி­கா­ரங்­களை குறைக்கும் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை நிறை­வேற்­றினோம். இது போன்று பல வேலைத்­திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றினோம்.
பொது மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை சரி­யான முறை­யிலும் ஒழுங்­கான முறை­யிலும் நிறைவேற்று காட்டினோம். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களே பூர்த்தியாகின்றன. இந்த தருவாயில் நாட்டின் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை ஒழுங்கு முறைப்படி செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிட்டுள்ளவர்கள் மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் வகையில் தொடர்ந்து செயற்பட்ட வண்ணம் உள்ளனர் என்றார்.