புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2016

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு தலையீட்டை நிராகரிக்க முடியாது! - பிரதமர் ரணில் தெரிவிப்பு!

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் வெளிநாடுகளின் தலையீடுகளை நிராகரிக்கவே முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

பிரிட்டனின் சனல் - 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமில்லை என்று கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது தொடர்பாக சனல் - 4 எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டுத் தலையீட்டை நிராகரிக்க முடியாது என்று கூறியிருக்கின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 
ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் எமது அரசு உறுதி பூண்டிருக்கின்றது. பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை எதிர்வரும் மே மாதம் உருவாக்கப்படும். போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் சந்தேகங்கள் உள்ளன. 

சரியான எண்ணிக்கையைக் கண்டறிவதில் நாம் ஆர்வம் கொண்டிருக்கிறோம். போரின்போதும் போருக்குப் பின்னரும் பலர் காணாமல்போயுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் இறந்து போயிருக்கலாம். அவர்கள் எவ்வாறு இறந்தனர்? என்ன நடந்தது? என்று அறிந்து கொள்ளும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்

ad

ad