புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2016

அசோக்நகரில் துணிகரம் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி வீட்டில் கொள்ளை மாடி வழியாக புகுந்த கொள்ளையன் பொருட்களை மூட்டை கட்டி அள்ளிச்சென்றான்

சென்னை அசோக்நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி வீட்டில் மாடி வழியாக புகுந்த கொள்ளையன் பணம், நகை உள்ளிட்ட
பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டான்.
வெங்கட்ராமன்
சென்னை அசோக்நகர் 7–வது அவென்யூ, 23–வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 65). இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் துணை பொதுமேலாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். சொந்த வீட்டில் 3 மகன்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வெங்கட்ராமனும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டு மாடி வழியாக கொள்ளையன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்துவிட்டான்.
வீட்டின் பீரோவில் இருந்த ரூ.50,000 ரொக்க பணம், 6 சவரன் தங்கநகை, ஏராளமான வெள்ளி பொருட்கள், 1 லேப்டாப், 2 செல்போன்கள், 1 ஐபேடு ஆகியவற்றை கொள்ளையன் மூட்டை கட்டினான்.
இதற்குள் சத்தம் கேட்டு வெங்கட்ராமன் தூக்கத்திலிருந்து எழுந்தார். விளக்கை போட்டார், வெளிச்சத்தில் கொள்ளையனை பார்த்ததும், அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல்போட்டார். கொள்ளையனை பிடிக்க முற்பட்டார்.
தப்பி ஓட்டம்
வெங்கட்ராமனை கீழே பிடித்து தள்ளிவிட்டு, கொள்ளையன் மூட்டை கட்டிய பொருட்களுடன் தப்பி ஓடிவிட்டான்.
இதுபற்றி வெங்கட்ராமன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ரோந்து போலீசார் விரைந்து வந்தனர். அந்த பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர். கொள்ளையனை பிடிக்க முடியவில்லை.
தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் குழந்தைவேலு, அசோக்நகர் இன்ஸ்பெக்டர் முனியசாமி ஆகியோர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை என்று தெரிகிறது. உடனடியாக குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ad

ad