புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2016

இடமாறும் யாழ். பேருந்து நிலையம்

யாழ். மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக வெளிமாவட்டத்துக்கான தூர சேவை பேருந்து தரிப்பிடம் யாழ். ரயில் நிலையத்துக்கு அருகில் இடமாற்றப்படவுள்ளது. நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முதற்கட்டமாக யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கான தூரசேவை பேருந்து தரிப்பிடம் யாழ். பிரதான ரயில் நிலையத்துக்கு அருகில் அமைக்கப்படவுள்ளது. உள்ளக சேவையில் ஈடுபடும் பஸ்களும், வெளியூர் சேவையில் ஈடுபடும் பஸ்களும் நகரின் ஒரே பகுதியில் அருகருகே நிறுத்தப்படுவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக வெளிமாவட்ட பஸ்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் வாய்ப்புகளும் உருவாகின்றன. அத்துடன் போக்குவரத்துச் சேவையைப் பெறுவதற்கு பொதுமக்கள் நேரத்தை விரயம் செய்யும் நிலைமையும் காணப்படுகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு பஸ் நிலையத்தை இடமாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

கடந்த வாரங்களில் ஜனாதிபதி மாவட்ட அரச அதிபர்களுடன் கொழும்பில் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். அதில் பேருந்து தரிப்பிட இடமாற்றம் குறித்துப் பேசப்பட்டது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

யு.டி.ஏ.எப். திட்டத்தின் மூலம் யாழ். ரயில் நிலையத்துக்கு அண்மையில் வெளிமாவட்ட பஸ்களுக்கான புதிய தரிப்பிடம் அமைக்கப்படவுள்ளது. அதற்கான இடமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பேருந்து தரிப்பிட மாற்றம் செய்து முடிக்கப்படும் என்றார்.

தந்திரோபாய நகரத் திட்டமிடலுக்காக 2014ஆம் ஆண்டு இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக உலக வங்கி, நாட்டின் ஆறு மாவட்டங்களைத் தேர்வு செய்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 

அவற்றில் காலி, கண்டி ஆகிய மாவட்டங் களில் முதற்கட்டமாக அபிவிருத்திகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மூன்றாவதாக உள்வாங்கப்பட்டுள்ள யாழ்.மாவட்டத்தில் இரு பஸ் தரிப்பிடங்களையும் இடமாற்றும் கோரிக் கைகள்  உலக வங்கியால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களில் விடுக்கப்பட்டிருந்தன.

மேலும் யாழ்.மாநகர சபையும் பேருந்து தரிப்பிட இடமாற்றத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தது.

ad

ad