புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2016

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் தியகடுவாவே சோமானந்த தேரர்

தியகடுவாவே சோமானந்த தேரர் மற்றும் அருட்தந்தை சக்திவேல் ஆகியோர் இன்று தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக மெகஸின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
இதேவேளை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்து இது தொடர்பான மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.
குறித்த மனுவில் எந்த விசாரணையுமின்றி, தண்டனையுமின்றி பல வருடங்களாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தப்படுவது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
கைதிகள் தொடர்பில் தியகடுவாவே சோமானந்த தேரர் கருத்து வெளியிடுகையில்,
பல வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அல்லது விடுதலையை அரசாங்கம் வழங்க வேண்டும். அனைவரும் எமது நாட்டு மக்கள், இவர்களின் விடுதலையை வலியுறுத்தியே இன்று நாம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு பிரசன்னமாகி குறித்த மனுவையும் கையளித்துள்ளோம் என தெரிவித்தார்.
அரசியல் கைதிகளை பார்வையிட்ட அருட்தந்தை சக்திவேல் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது. சுதந்திரமாக வாழ வேண்டியவர்கள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு கடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் போது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர்களின் உறவினர்கள் எதிர்ப்பார்ப்புடன் இருந்தனர். இருப்பினும் அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் சிதைக்கப்பட்டு விட்டன. சுதந்திர தினத்திற்கு முன்போ அல்லது அதற்கு பிறகாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்தார்.

ad

ad