புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2016

நடிகர் சங்க தேர்தல் விவகராமே என் நீக்கத்துக்கு காரணம் : எர்ணாவூர் நாரயணன் விளக்கம்


நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதி யிலும், அக்கட்சியைச் சேர்ந்த எர்ணாவூர் நாராயணன் திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் கட்சியி லிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்ட தாக அதன் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து எர்ணாவூர் நாராயணன் அளித்துள்ள விளக்கத்தில், ‘’ நடிகர் சங்க தேர்தலே தனது நீக்கத்து காரணம்.

நடிகர் சங்கத் தேர்தலில், ஆளும் அதிமுக சரத்குமாருக்கு சாதகமாக செயல்படவில்லை. இதையடுத்து சரத்குமார் என்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார்.  அதற்கு மறுப்பு தெரிவித்ததாலே என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். ஆனால்,  சமத்துவ கட்சியைச் சேர்ந்த பாதிக்கும் அதிகமானோர் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையில் போட்டியிட்ட எனக்கு வேறு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை.  மேலும், வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் சரத்குமார் திமுகவு டன் கூட்டணிக்கு முயன்று வருகிறார்’’என்று கூறினார்.

ad

ad