புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2016

ஞானசாரவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ம் திகதி வரை நீடிப்பு!

திருமதி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியது மற்றும் தூற்றியது தொடர்பான வழக்கில் பொது பல சேனா பயங்கரவாத தனியார் நிறுவனத்தின் செயலாளர் ஞானசாரவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 16ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு வழக்கின் சாட்சியான சந்தியாவை ஞானசார அச்சுறுத்தியிருப்பதனால் அவ்வழக்கில் அவருக்குப் பிணை வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்றைய தினம் பிணை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரருக்கு எதிரான சட்டமா அதிபரின் வழக்கு விசாரணைக்கு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 13 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுப்பது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மார்ச் மாதம் முதலாம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
மாலபே தலாஹேன பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க ஜெப நிலையம் ஒன்றை 2008 ஆம் ஆண்டு தாக்கியதாக ஞானசார உட்பட 13 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தேக நபர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி, சந்தேக நபர்களை குற்றவாளிகள் என உத்தரவிடக் கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

ad

ad