10 பிப்., 2016

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற வீரவேங்கள் நினைவு சுமந்த யங் றோயல் உள்ளரங்க சுற்றுப் போட்டியும்வீரர்கள் கௌரவிப்பும்


கடந்த (07.02 .2016 )ஞாயிறன்று சூரிச் கில்க்பெர்க் மைதானத்தில் காலை  எட்டு மணி முதல்  நடைபெற்ற  யங்
றோயல் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்று போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது  .33 கழகங்களை உள்வாங்கி காலை எட்டு மணிக்கு நெருப்பு வேங்ககைகளை நெஞ்சில் நிறுத்தி ஆரம்பமான இந்த  சுற்றுப் போட்டி  எந்த வித  தொய்வுமின்றி    கட்டுக்கோப்பான ஒழுங்கமைப்பில்  இரவு 10 மணி வரை  நடந்தேறியது  வியக்கத்தக்கது .இந்த சுற்று போட்டியிலும் லீஸ்  யங் ஸ்டார் விளையாடடுக் கழகம் எந்த போட்டியிலும் தோல்வியுறாது தொடர் வெற்றிகளை பெற்று கிண்ணத்தை  தமதாக்கியது .அந்த கழகத்தின் வீரர்களான  நிறோச் நடராசா  ஆட்ட நாயகனாகவும் பந்துக்காப்பாளர்  பாஸ்கரன்  ஜோன் சிறந்த பந்துக்கபாளராகவும் றோயல் அணிவீரர் நிதுசன்  சிறந்தவீரராகவும் தெரிவாகினர். இந்த  வருட பருவகால  ஆட்டங்களில் சிறப்பாக  விளையாடிய எட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து   ஒருவரை  விருதுக்காக  அடையாளப்படுத்தி இருந்தனர் . யங் ஸ்டாரின் நிஷாத்,திலீபன்,தாய்மண்ணின் கஜன் ,கபிரன்


யங்பேர்ட்சின்  கார்லோஸ்,லிப்பாச்கி,இளம்சிறுத்தைகளின் தனுசன், றோயலின் நிலுக்சன் ஆகியோரே அந்த வீரர்களாவர் இளம் சிறுத்தைகள் அணியின்  அனுபவம் மிக்க சிறந்த  பாதுக்கப்பு வீரர்  தம்பையா பிரேமானந்தன் தனுசனுக்கே  அந்த விருது  வழங்கப்பட்டது . இன்னும் பல்வேறு  கணிப்பின் நிமித்தம்  வெவ்வேறு விருதுகளும் கௌரவிப்புகளும்  நிகழ்வுற்றன. நெருப்பு வேங்கை  செங்கொடி நினைவு  கிண்ணத்துக்கான பெண்களுக்கான  போட்டிகளும்   நடந்தேறியது . நேரம் தவறாமை . கட்டுப்பாடு, சிநேகத்தன்மை ,மற்றைய கழகங்களை மதிக்கும் பெரும் தன்மை ,திறமைக்கு முன்னுரிமை , விளையாடடு விதிகளை சிறப்பாக கடைப்பிடித்தமை , கால அட்டவணையின் வடிவமைத்தல் என அனைத்து திசைகளிலும்  முன்கூட்டியே திட்டமிட்டு   ப்நேர்த்தியாக இந்த சுற்று போட்டியை  நிகழ்த்தி முடித்திருந்தார்கள் .இதற்காக யங் றோயல் கழகத்துக்கும் வீரர்கள் ஆதரவாளர்கள் மற்று சிகரமாய் செயல்பட்ட திரு. தர்மலிங்கம் பாபு அவர்களுக்கும் பாராட்டுக்கள்