புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2016

ஜெயலலிதா தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமணம்



ஜெயலலிதா இன்று காலை 11 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கட்சி நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்தார்.

கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம் மகள் திருமணம்

திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சருமான ஆர். காமராஜ் மகன் திருமணம்.

தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மகள் திருமணம்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் மகள் திருமணம்.

கழக விவசாயப் பிரிவுச் செயலாளரும், திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.வைரமுத்து மகள் திருமணம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி மகள் திருமணம்.

நீலகிரி மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், உதகமண்டலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புத்திசந்திரன் மகள் திருமணம்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் மகள் திருமணம்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழக அவைத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என். ராமச்சந்திரன் மகன் திருமணம்.

வேலூர் மேற்கு மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியக் கழகச் செயலாளரும், வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோவி. சம்பத்குமார் மகன் திருமணம்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அனக்காவூர் ஒன்றியக் கழகச் செயலாளரும், வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செய்யாவூர் வே.குணசீலன் மகன் திருமணம்.

மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.கருப்பையா மகள் திருமணம்.

வேலூர் கிழக்கு மாவட்டம், வாலாஜா ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளரும், திருப்பாற்கடல் ஊராட்சி மன்றத் தலைவருமான எம்.ஜி.கே. தனஞ்செழியனின் திருமணம்.

 திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் மகள் ஆகியோரின் திருமணங்களை நடத்தி வைத்தார்.

ad

ad