புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2016

நியமனங்களில் அரசியல் செல்வாக்கு: வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


வடமாகாண பாடசாலைகளில் மிக நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறுகோரி வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா, மடு ஆகிய கல்வி வலயங்களில் சுமார் 10 வருடங்களாக கடமையாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்த பின்னர் தாங்கள் 700 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வாக்குறுதி கொடுத்தபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினர்.
மேலும் தங்களின் நியமனங்கள் பிற்போடுவதற்கு அரசியல் காரணங்களும் இருப்பதாகவும், அரசியல் ரீதியில் செல்வாக்குப் பெற்றவர்கள் நியமனங்களைப் பெற்றுள்ளதாகவும், தடுப்பில் இருந்து விடுதலையானவர்களும் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இந்நிலையில் பிற்பகல் மேற்படி தொண்டர் ஆசிரியர்கள் முதரமைச்சரை நேரில் சந்தித்து பேசினர் இதன்போது தொண்டர் ஆசிரியர்களாக உள்ள உங்களுக்கான நியமனம் விரைவுபடுத்தி வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்த நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

ad

ad