புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2016

செல்ஃபி எடுத்த போது கால்வாயில் மூழ்கி 3 மருத்துவ மாணவ -மாணவியர் பலி



செல்ஃபி எடுத்தபோது 3 மருத்துவ மாணவியர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில்   மருத்துவக் கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் என்று ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாம் முடிவடைந்த பிறகு  3 மாணவர்கள், 2 மாணவிகள் மட்டும் ஹூலிவானா கிராமத்திற்குச்  சென்றனர். அங்குள்ள கால்வாய் ஒன்றில் ஒரு மாணவர் மட்டும் கால்வாய் கரையோரம் நின்றும்,4 பேர் கால்வாய் தண்ணீரில் இறங்கியும் செல்ஃபி  எடுத்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் 4 பேரும் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்தவுடன் கெரகோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கிய 4 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், ஜீவன் ,சுருதி ஆகியோரை போலீசார் கிராம மக்களின் உதவியுடன் மீட்டனர். இதில் சுருதி பிணமாக மீட்கப்பட்டார். உயிருக்கு போராடிய ஜீவனை,  போலீசார் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜீவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இன்னொரு மாணவி சிந்து,  காயங்களுடன் மீட்கப்பட்டார்.
மேலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இன்னொரு மாணவரான கிரீசின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து, கெரகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ad

ad