புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2016

திமுக- காங். கூட்டணி உறுதியானது... ஆட்சியில் பங்கேற்பது பின்னர் முடிவு... ஆசாத் வைத்த முதல் செக்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்,  தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதாக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்
குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக,  அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து திமுக முடிவு செய்யும்.

தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்" என்றார்.

திமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆசாத், அதை திமுகதான் முடிவு செய்யும் என்றார்.

2013ல் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதே என்ற கேள்விக்கு, அரசியலில் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும் என்று பதில் அளித்து நழுவினார் ஆசாத்.

ad

ad