புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2016

நல்லாட்சியின் நல்ல சகுணம்: டக்ளஸின் யோசனையை த.தே கூ பா உ ஸ்ரீநேசன் வழிமொழிந்தார்

அரசியலில் முரண்பாடுகளை கொண்டிருந்த ஈபிடிபியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நாடாளுமன்றத்தில் நிகழ்ந்துள்ளது.
 
இது நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளில் ஒன்றாக அரசியல் தரப்புக்கள் கருதுகின்றன.
வடக்கு கிழக்கில் போர் அழிவுகளை அகற்றி புனரமைப்புகள் செய்யப்படவேண்டும் என்று தனி ஆள் யோசனையை ஈபிபிடியின் செயலாளர் டக்ளஸ் தேவாநந்தா நேற்று முன்மொழிந்தார்.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜானமுத்து ஸ்ரீநேசன் வழிமொழிந்து பேசினார்.
தமது முன்மொழிவை முன்வைத்த டக்ளஸ் தேவாநந்தா, போரில் வெற்றிப்பெற்ற சிங்கள இனம் உவகைக் கொண்டு செயற்படும் போது தோல்விக்கண்டது தமிழினம் என்ற வகையிலான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
எல்லாளன் தோல்வி கண்டபோதும் அவனை வெற்றி கொண்ட துட்டகைமுன உவகை கொள்ளவில்லை. மாறாக எல்லாளனை வணங்குமாறு  கட்டளையிட்டமையை டக்ளஸ் நினைவு கூர்ந்தார்.
இதேவேளை அரசியலமைப்பு யோசனையின்போது மாவட்டங்களில் சனத்தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப இன அடிப்படையிலான பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற யோசனையை தாம் முன்வைக்கவுள்ளதாக டக்ளஸ் தேவாநந்தா மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் தமது கருத்தை முன்வைத்தார்

ad

ad