-

13 பிப்., 2016

தீவக பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் உள்ள அளவை நிறுவை உபகரணங்கள், கருவிகளுக்கு சீல்

01
தீவக பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் உள்ள அளவை நிறுவை உபகரணங்கள், கருவிகளுக்கு சீல் பதிக்கும் வேலைகள்
முன்முரமாக  நடைபெற்று வருகின்றன.
மொத்த, சில்லறை விற்பனை நிலையங்களில் பாவனையிலுள்ள அளவை நிறுவை உபகரணங்களையும் கருவிகளையும் இவ்வாரத்திற்குள் தகுதி நிர்ணய முத்திரை (சீல்) பதிக்குமாறு சகல வர்த்தகர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சீலிடப்படாத நிலையில் வர்த்தகர்கள் அளவை நிறுவை உபகரணங்களையும் கருவிகளையும் பயன்படுத்துவதன் காரணமாக, பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும்போது பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, நேற்றும், நேற்று முன்தினமும் வேலணை பிரதேச செயலகத்திலும், பிரதேச சபையிலும் இவ்வேலைகள் முன்முரமாக நடைபெற்றன.
 02 03

ad

ad