புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2016

'திமுக - அதிமுக ஒண்ணா தோத்து பார்த்ததில்லையே... பார்ப்ப!' - ஆஹான் ம.ந.கூ.!

மிழக சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. சீட்டுக்காக  கொள்கை கோட்பாடுகளையெல்லாம் மறக்கும்
தருணம் இது. திமுகவை பாரதிய ஜனதா நெருங்கி வருகிறது என்றால் திமுக தலைமையோ விஜயகாந்தை நோக்கி வலை வீசுகிறது. மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி யாருடன் வைக்கலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் 'மக்கள் நல கூட்டணி ' என்ற ஒரு கூட்டணி ஏற்பட்டு  முழு வீச்சாக களத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த கூட்டணிக்கு மதிமுக செயலாளர் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜி.கே. வாசனோ , 'கழுவுற மீனுல நழுவுற மீனாக ' நழுவிக் கொண்டிருக்கிறார். கடைசிக் கட்டத்தில் எங்கும் பேரம் படியாத பட்சத்தில் மக்கள் நலக்கூட்டணியை நோக்கி விஜயகாந்த் காய் நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு மக்கள் நலக் கூட்டணி ஒரு 'மனமகிழ் மன்றம்' போல இருந்தாலும் விஜயகாந்தும், ஜி.கே. வாசனும் இணையும் பட்சத்தில் 'கில்லி'  கூட்டணியாக மாறி விட வாய்ப்புள்ளது.
தேர்தல் சமயத்தில் ஜி.கே. வாசனும், விஜயகாந்தும் வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுக்கு இருக்கிறது. 'அவர்கள் வரும் போது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் நாம இப்போதே இயங்க  தொடங்கி விடுவோம்' என்று மக்கள் நலக் கூட்டணி இளைய தலைமுறையை குறி வைத்து முழு வீச்சாக இயங்க தெடங்கி விட்டது
தமிழக கட்சிகளை  பொறுத்தவரை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் முதன் முறையாக கால் வைத்து,  இளையதலைமுறையை குறி வைத்து களத்தில் இறங்கியது திமுகதான். அந்த கட்சியின் தலைவரே கூட 93 வயதிலும்,  ஃபேஸ்புக் பக்கத்தில் முழுமையாக இயங்குவது போல காட்டிக் கொள்வார். அவரை ஃபேஸ்புக் பக்கத்தில் இயங்க வைக்கவென்றே  ஒரு தனிக்குழு  இயங்கியும் வருகிறது.
திமுக சமூக வலைதளங்களில் முழுமையாக இயங்க காரணம்,  எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் ஒரு கோடியே 30 லட்ச இளைய தலைமுறை வாக்களிக்கப்போகிறது என்பதால்தான். கருணாநிதி ஃபேஸ்புக் பககத்தில் இயங்குவதற்கு இதுதான் முதல் காரணம் ஆகும்.

இப்போது இதனை மக்கள் நலக் கூட்டணியும் முழுமையாக புரிந்து கொண்டு விட்டது. அண்மையில் இந்த நான்கு தலைவர்களும் ஒரு 'செல்ஃபி ' வெளியிட்டார்களே அதற்கு காரணமும் இதுதான். இளைய தலைமுறையை கவரும் வகையில்தான் இந்த செல்ஃபியும் எடுத்து வெளியிடப்பட்டதாம். அது மட்டுமல்ல மக்கள் நல கூட்டணியின் ஃபேஸ்புக் பக்கத்தில் அம்மையாரையும் மூத்தவரையும் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
ஊழல்களின் மொத்த உருவம் இந்த கட்சிகள் என்று அதிமுக, திமுக பற்றிய மீம்ஸ்களை அசராமல் வெளியிட்டு  கடுமையாக விமர்சித்தும் வருகிறது. இளம் வாக்காளர்களை கவரும் வகையில் மீம்ஸ்களை தயார் செய்யவே தனி டீம் மக்கள் நல கூட்டணியில் இயங்கி வருகிறதாம். மேலும் இந்த பக்கத்தை ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையினரும்' லைக் 'செய்துள்ளனர்.

இந்த தேர்தலில் மாற்றம் நிகழ்ந்தால் 1 கோடியே 30 லட்சம் இளம் வாக்காளர்கள்தான் காரணமாக இருப்பார்கள் என்பதை மக்கள் நல கூட்டணி நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. அதற்கேற்ற வகையில் மீம்ஸ் வகையறாக்கள் வகை வகையாக தயார் செய்யப்பட்டு வருகிறது.  தேர்தல் சமயத்தில் இந்த இரு கட்சிகளை மீம்ஸ்களாலேயே பதம் பார்த்து விடலாம் என்பதும் மக்கள் நல கூட்டணியின் நம்பிக்கை.
இளைய தலைமுறையின் மன ஓட்டத்தை நன்றாகவே புரிந்தும் வைத்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி, இன்னொரு கேள்வியை முன்வைக்குமாம். ஜி. கே. வாசனும் விஜயகாந்தும் இணையும் பட்சத்தில்,   "நாங்களும் எம்.பியாக மத்திய அமைச்சராக இருந்துள்ளோம். எங்கள் மீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா?" என்ற கேள்வியையும் தேர்தல் சமயத்தில் கேட்குமாம். 
அதே போல பிரபல சமூக வலைதளமான 'யூ டியூப்' ல் புதிய அக்கவுண்ட்டை தொடங்கி இருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. இதில் கூட்டணியின் செயல்பாடுகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகிறது. ஆக முழுவீச்சில் களம் இறங்கியிருக்கிறது மக்கள் நலக் கூட்டணி.
அடுத்து 'தமிழகத்தில் அதிமுகவும் திமுகவும் ஒருங்கே தோற்கும் தேர்தலை  பார்த்திருக்கீறீர்களா? அந்த தேர்தல் இதுதான்  ' என்ற மந்திர வார்த்தையை  பயன்படுத்துமாம்.

அம்மாவும் அய்யாவும் ஜாக்கிரதை!

ad

ad