புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2016

சுவிஸில் குற்றங்களில் அதிகளவில் ஈடுபடுவது குடிமக்களா? வெளிநாட்டினர்களா?

சுவிஸில் குற்றங்களில் அதிகளவில் ஈடுபடுவது குடிமக்களா? வெளிநாட்டினர்களா? 28 ஆம் திகதி சுவிஸ் குடிமக்கள் அனைவரும்
இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்க உள்ளனர்.வெளிநாட்டு பூர்வீகம் உள்ளவர்களுக்கு பிறந்தவர்கள் தற்சமயம் 3,50,000 பேர் உள்ளனர், இவர்களிடம் சுவிஸ் கடவுச்சீட்டுகளும் இல்லை.
சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகளவில் குற்றங்களில் ஈடுபடுவது அந்நாட்டு குடிமக்களா அல்லது அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர்களா என்ற கேள்விக்கு விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் புள்ளியியல் துறை அலுவலகம் கடந்த 2014ம் ஆண்டு வெளியிட்டு ஆய்வு தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதே ஆண்டு புள்ளிவிபரப்படி, சுவிஸிற்கு சுற்றுலா பயணிகளாக வரும் வெளிநாட்டினர்களும் குடியிருப்பு அனுமதி இல்லாத வெளிநாட்டினர்கள் தான் அதிகளவில் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புள்ளிவிபரங்களின் விரிவான பட்டியல் சுவிஸில் உள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 1.86 மில்லியன். இதில், குற்றம் சாட்டப்பட்ட 10 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2.2 சதவிகிதம் ஆகும்.
ஆனால் இதே வரிசையில் குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் குடிமக்களின் எண்னிக்கை 0.7 சதவிகிதம் ஆகும்.
சுவிஸில் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ள வெளிநாட்டினர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.69 மில்லியன் ஆகும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 10 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1.3 சதவிகிதம் ஆகும்.
மேலும், சுவிஸில் குற்றம் நிரூபிக்கப்பட்ட வெளிநாட்டினர்களின் மொத்த எண்ணிக்கை 1.15 சதவிகிதம் ஆகும். ஆனால், சுவிஸ் குற்றம் நிரூபிக்கப்பட்ட சுவிஸ் குடிமக்களின் எண்ணிக்கை 0.3 சதவிகிதம் ஆகும்.
இதே வரிசையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குடியிருப்பு அனுமதி பெற்ற வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 0.6 சதவிகிதம் ஆகும்.
இதனால் சுவிஸ் நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினர்களை பொதுவாக்கெடுப்பின் மூலம் வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி வரும் 28 ஆம் திகதி சுவிஸ் குடிமக்கள் அனைவரும் இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்க உள்ளனர்.
இதில் 50 விழுக்காடிற்கு மேல் பதிவாகும் வாக்குகளை கருத்தில்க்கொண்டு அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளது.
சுவிஸ் நாட்டில் வெளிநாட்டு பூர்வீகம் உள்ளவர்களுக்கு பிறந்தவர்கள் தற்சமயம் 3,50,000 பேர் உள்ளனர், இவர்களிடம் சுவிஸ் கடவுச்சீட்டுகளும் இல்லை.

ad

ad