புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர்களுக்கு ஆபத்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் விமர்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு
எதிராகத் தராதரம் பாராது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இதில் கலந்துகொண்டார். இதன்போதே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய முழு அதிகாரமும் ஒழுக்காற்று நடவடிக்கைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதியைக் கடுமையாக விமர்சித்த உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
விளக்கமளிப்பதற்குத் தேவையான காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர் ஜனாதிபதியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றமையினால் அவர்களும் ஆபத்து ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ad

ad