புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2016

தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகளை மீளப்பெறுவது தொடர்பில் இந்த வாரம் சட்டமா அதிபருடன் பேச்சு -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகளை மீளப்பெறுவது தொடர்பில் இந்த வாரம் சட்டமா அதிபருடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்தத் தகவலைத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் அரசியல் கைதிகளில் குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் எவருமே இல்லை என்று நான் தெரிவித்தாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. அது தவறான செய்தி. 11 பேர் குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் இன்னமும் இருக்கின்றனர்.

குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் இருப்பவர்கள், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பவர்கள், தண்டனை பெற்றவர்கள் என்று தமிழ் அரசியல் கைதிகளை மூன்று கட்டமாகப் பிரிக்க முடியும். இதில் குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் இருப்பவர்களைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக 39 பேரும் பின்னர் 8 பேரும் விடுவிக்கப்பட்டனர். தற்போது 11 பேர் இன்னமும் இருக்கின்றனர். ஒரு சிலரைத் தவிர ஏனையோரை பிணையில் விடுவிப்பதாக அரசு தெரிவித்திருந்தது.

நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பவர்கள் மீதான வழக்குகளை மீளப் பெறுவது தொடர்பில் சட்டமா அதிபரே நடவடிக்கை எடுக்க முடியும். கடந்த ஜனவரி 9 ஆம் திகதிக்குப் பின்னர் சட்டமா அதிபர் இல்லாத நிலை இருந்தது. கடந்த வாரம் தான் சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அவருடன் இந்த வாரம் பேச்சு நடத்தவுள்ளோம்.

தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால, தன்னைக் கொலை செய்ய வந்ததாக தண்டணை வழங்கப்பட்ட அரசியல் கைதியை மன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தார்.

ஏனையோர் தொடர்பிலும் அவர்தான் முடிவெடுக்க முடியும். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவர் தொடர்பிலும் ஜனாதிபதி விபரங்களைக் கோரிப் பெற்றிருக்கின்றார். தனது ஆலோசகர்களுடன் இது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து வருகின்றார். அவர்களையும் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தும்" - என்றார். 

ad

ad