புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2016

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முதலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள


தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. மற்றும்  பா.ஜ.க. தலைமையிலான அணிகளுக் கிடையே 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டணி கட்சிகளிடையே தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.  
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தற்போது தீவிரப்படுத்தியுள்ளன. முதலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி கொடுத்தது.

இதையடுத்து கூட்டணியில் பிரதான கட்சியாகத் திகழும் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. முடிவு செய் தது. இதற்காக காங்கிரசுக்கு தி.மு.க. அழைப்பு விடுத் தது.

காங்கிரஸ் கட்சியில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே 8 பேர் கொண்ட குழுவை மேலிடம் ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை யிலான அந்த குழுவில் கோபிநாத், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, தங்கபாலு, யசோதா, தனுஷ்கோடி ஆதித்தன், ஏ.பி.சி.வி. சண்முகம் ஆகிய 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் இருவரும் இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் இருவருக்கும் தமிழக காங்கிர சார் உற்சாக வரவேற்பு அளித்தனர்

பிறகு அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரத்துக்கு சென்றனர் அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் சென்றனர்அவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தொகுதி பங்கீடு  பேசினர்

இந்த சந்திப்புக்கு பிறகு குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க தலைவர் கருணாநிதியுடனா தொகுதி பங்கீடு  பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. தி.மு.க அணியில்  உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள்  குறித்து பேசி இருக்கிறோம். இது குறித்து காங்கிரஸ் மேலிடத்திடம் தகவல் தெரிவிக்கப்படும். எத்தனை தொகுதிகள் என்பது இன்றைய பேச்சுவார்த்தையில் இடம்பெறவில்லை.  கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது அதன் பிறகே தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும். சட்டசபை தேர்தலில் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும்  தேர்தல் வியூகம் குறித்தும் இன்றைய சந்திப்பில் பேசி உள்ளோம். என கூறினார்.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரசுக்கு 64 தொகுதிகளை தி.மு.க. விட்டுக் கொடுத்தது. 2011-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்ததால் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் நெருக்கடிக்கு தி.மு.க. சற்று வளைந்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 
ஆனால் தற்போது அத்தகைய நிர்ப்பந்தமான சூழ்நிலை எதுவும் தி.மு.க. வுக்கு இல்லை. எனவே முன்பு போல அதிக தொகுதி களை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்ய இயலாது என்று ஏற்கனவே தி.மு.க. தலைவர் கள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.  இந்த யதார்த்தத்தை நன்கு உணர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர்களும் 40 முதல் 50 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு தி.மு.க. தலைவர் களிடம் தெரிவித்தனர். 

ஆனால் தி.மு.க. தரப்பில் காங்கிரசுக்கு 30 முதல் 35 தொகுதிகளை மட்டுமே தர இயலும் என்றனர். தே.மு.தி.க. வரும்பட்சத்தில் இந்த குறைந்த அளவு தொகுதிகளை பெற்று கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் முன்பு முடிவு செய் திருந்தனர்.

ஆனால் வைகோ அணியுடன் தே.மு.தி.க. சென்று விட்டதால் தி.மு.க. கைவசம் நிறைய தொகுதிகள் உள்ளன. ஆகையால் 40 முதல் 50 தொகுதிகளை ஒதுக்கி தாருங்கள் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தி.மு.க. விடம் பேசினார்கள். 

அதை தி.மு.க. ஏற்க வில்லை. 2006, 2011-ம் ஆண்டு களில் நடந்த தேர்தல்களில் மிக குறைந்த தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டதால் தொண்டர்களிடம் அதிருப்தி நிலவியது. எனவே இந்த தடவை அதிக தொகுதிகளில் போட்டி யிட வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்குமா என்பதில் இழுபறி ஏற்பட்டது. இது பற்றி கருணாநிதியும்-குலாம்நபி ஆசாத்தும் விவாதித்தனர். இதைத் தொடர்ந்து தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூக முடிவுக்கு வந்தது.  

தி.மு.க.-காங்கிரஸ் இடையே இன்று நடந்த பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்த போதும் தொகுதி பங்கீடு முடிவாக வில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் இன்று காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு விட்டதாம். ஆனால் அதை இப்போதே அறிவிக்க வேண்டாம் என்று இரு தரப்பிலும் முடிவு செய்துள்ளார்களாம். ஏனெனில் இன்று காங்கிர சுக்கு தி.மு.க. கொடுக்கும் தொகுதிகள் எண்ணிக்கையை பார்த்து விட்டு தமிழ் மாநில காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. மேலிடம் திட்டமிட்டிருந்ததாம்.இதை அறிந்த தி.மு.க. மேலிடம் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் விபரத்தை அறிவிப்பதை தாமதம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

ad

ad