25 மார்., 2016

கட்டுநாயக்கவில் விமானங்களை சோதனை போடும் விமானப்படை விசேட அணியினர்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அனைத்து விமானங்களையும் விமானப்படையின் விசேட அணியினர் பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிகை்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. 
பெல்ஜியம், பிரசல்ஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து உலக நாடுகள் பூராவும்  விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கு நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதையடுத்து இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களில் வந்த பயணிகள் வெளியேறி சென்ற பின்னர் குறித்த சோதனை நடவடிக்கைகளை விமானப்படையின் விசேட அணியினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது