25 மார்., 2016

இந்திய அணிக்கு வந்த இக்கட்டான நிலை சோதனையை கடக்குமா .

ந்திய அணி உலகக் கோப்பை டி20 போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுமா? - இந்த கேள்விக்குதான் ஒட்டு மொத்த இந்தியாவும்
பதில் தேடிக் கொண்டிருக்கிறது. இந்தியா அரையிறுதிக்கு முன்னேற என்ன நடக்க வேண்டும் என்பதுதான் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆட்டமும் கூட இந்தியாவின் உலகக் கோப்பை கனவை நிர்ணயிக்கும்.  இந்தியா அரையிறுதிக்கு முன்னேற,  இந்த மூன்று விஷயங்களில் ஒன்று நடந்தே ஆகவேண்டும்.
எப்படி தகுதி பெறும் இந்தியா?

முடிவு 1:

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றால்,  இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் காலிறுதி ஆட்டம் போலவே மாறிவிடும்.  இந்தியா,  ஆஸ்திரேலியாவை வென்றால் மட்டும் போதும்,  அரையிறுதிக்கு சென்று விடும்.

முடிவு 2:
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்றால், இந்தியா, ஆஸ்திரேலியாவை கட்டாயம் வென்றாக வேண்டும். அதிலும் பாகிஸ்தான் தற்போது இந்தியாவை விட அதிக ரன் ரேட்டில் உள்ளது. வென்றால் இன்னும் ரன்ரேட் அதிகரிக்கும். அதனை தாண்டும் விதத்தில் இந்தியாவுக்கு ரன் ரேட் இருக்க வேண்டும். மேலும் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளையும் பெற வேண்டும். இவையெல்லாம் நடந்தால் இந்தியா அரையிறுதிக்கும் முன்னேறும்.
முடிவு 3:

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால்,  இரு அணிகளும் மூன்று புள்ளிகளோடு இருக்கும். இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் 6 புள்ளிகளோடு அரையிறுதிக்குள் நுழையும். 

ஒருவேளை  இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால்,  இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா,  பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும். அப்போது 5 புள்ளிகளுடன் இந்தியா அரையிறுதிக்கு முன்ணேறும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மூன்றிலும் பொதுவாக உள்ள விஷயம் இந்தியா - ஆஸ்திரேலியாவை அபாரமாக வெல்ல வேண்டும் என்பதுதான்.