புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2016

மனைவி–மகன்–மகள் கழுத்தை அறுத்து கொன்று தொழில் அதிபர் தற்கொலை

சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் வசித்து வந்தவர் தேவேந் திரகுமார் (48). தொழில் அதிபர். இவரது மனைவி தீக்ஷியா (38), மகள் ஷெர்பி (15), மகன் மானஷ் (12). இவர்களுடன் தேவேந்திரகுமாரின் தாய் ஷோபாதேவியும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

வெளிநாட்டில் வேலை செய்து வந்த தேவேந்திரகுமார் சில மாதங்களுக்கு முன்னர் தான் சென்னை திரும்பியுள்ளார். இங்கு வந்த பின் சரியான வேலை இல்லாமல் இருந்து வந்தார்.

இதனால் ஷேர்மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதில் சில நேரங்கள் நல்ல வருவாய் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

நேற்று தேவேந்திரகுமார் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தியேட்டருக்கு இரவு காட்சி சினிமாவுக்கு சென்றார். படம் முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய அவர்கள் தூங்க சென்றனர். மகள் ஷெர்பி, மகன் மானஷ் ஆகியோர் தனி அறையில் படுத்து தூங்கினர். தேவேந்திரகுமார் மனைவி தீக்ஷியாவுடன் இன்னொரு அறையில் படுத்திருந்தார். தாய் ஷோபாதேவியும் தனியாக தூங்கினார்.

 மகள், மகன் என்றும் பாராமல் தேவேந்திரகுமார் அவர்களின் கழுத்தை கத்தியால் ஆட்டை அறுப்பது போல அறுத்தார். இதில் ரத்தம் பீய்ச்சி அடித்து மெத்தையில் பெருக்கெடுத்து ஓடியது. குழந்தைகள் இருவரும் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து பலியானார்கள். அந்த அறையில் இருந்து வெளியே வந்த அவர் பக்கத்து அறைக்கு சென்றார். மனைவி தீக்ஷியாவையும் கழுத்தை அறுத்து கொன்றார். அவரும் கட்டிலிலேயே பிணமானார்.

பின்னர் தன்னை தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தேவேந்திரகுமாரும் தற்கொலை செய்து கொண்டார்.

மகனின் இந்த கொலை வெறியாட்டத்தை தடுக்க முடியாமல் தாய் ஷோபாதேவி கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் அதிகாலை நேரம் என்பதால் அவரது சத்தத்தை கேட்டு யாரும் கண்விழிக்கவில்லை. எல்லாம் முடிந்து போன பின்னரே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.

கொத்தவால் சாவடி போலீசார் விரைந்து சென்று 4 பேரின் உடலையும் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேவேந்திர குமாரின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் ஆகும். இவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பலரும் வெளிநாட்டிலேயே வேலை செய்து வருகிறார்கள். தேவேந்திரகுமாரும் தென் ஆப்பிரிக்காவில்தான் வேலை செய்து வந்தார்.

மிகவும் கொடூரமாக மனைவி, குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது பற்றி, தேவேந்திரகுமார், கடிதம் ஒன்றையும் எழுதி அதனை வீட்டில் இருந்த பீரோவில் ஒட்டி வைத்துள்ளார்.

‘‘எனது, குடும்பத்தை நானே கொல்லப்போகிறேன். இதற்கு நானே பொறுப்பு. வேறு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதில் 3 செல்போன் எண்களும் இடம் பெற்றுள்ளன. அந்த நம்பருக்கு போன் செய்து இந்த தகவலை கூறிவிடுங்கள்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad