புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2016

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளரா?: பா.ஜ. மறுப்பு!

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்  என தான் பேட்டி அளித்ததாக வந்த செய்தி தவறானது என பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

ஆங்கில இணைய தளம் ஒன்றில், " தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக முடிவு செய்துள்ளது. தற்போது வரை பிரேமலதா விஜயகாந்திடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பா.ஜ.க - தே.மு.தி.க இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து பேச பிரேமலதா விஜயகாந்த் விரைவில் டெல்லி வரவுள்ளார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளை பா.ஜ.க.வும், தே.மு.தி.க.வும் சரிபாதியாக பங்கிட்டு கொள்வது தொடர்பான ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றதை போல், பா.ஜ.க.வும், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது'' என பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்த செய்தி உண்மையல்ல என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக்க விருப்பம் என நான் கூறியதாக வெளியாக செய்தி தவறு. இதுகுறித்து பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்க உள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

ad

ad