புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2016

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: ஜெ., தரப்பு வக்கீலுக்கு நீதிபதி போட்ட உத்தரவு


சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக் கோர்ட் தீர்ப்பளித்தது.

நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடகா ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசும், தி.மு.க.வும் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு மேல் முறையீட்டு மனு விசாரணை கடந்த 23–ந் தேதி தொடங்கியது. கர்நாடகா அரசு சார்பில் வக்கீல் தவே வாதிட்டார். அவரது வாதம் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் பரமானந்தா கட்டாரியா ஆஜராகி வாதாடினார்.  அவர்,   ‘’மேல் முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க முடியாது. ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் அமர்வு தான் விசாரிக்க முடியும். ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சுப்ரீம் கோர்ட்டு விசாரிப்பது தேவையற்றது’’என்று வாதிட்டார்.

இந்த கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுமாறு வக்கீல் கட்டாரியாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ad

ad