புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 மார்., 2016

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றால் என்ன நடக்கும்?

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது எனவும், வருகின்ற 11-ம் தேதி கருணாநிதி, விஜயகாந்த் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், விஜயகாந்த் தலைமையில் ஒரு புதிய அணியை உருவாக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது என்றும், அந்த அணியில் திருமாவளவனை மட்டும் இழுக்க விஜயகாந்த் முயற்சி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், திருமாவளவனை விஜயகாந்த் தலைமையிலான புதிய கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க.வில் உள்ள முக்கிய தலைவர்களும் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றால் அ.தி.மு.க.வும் வலுவான கூட்டணி அமைக்க முயற்சிக்கும். அதனால், மக்கள் நலக் கூட்டணி உடைய வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், விரைவில் மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறும்" என்றார்.