லண்டன் மிச்சம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தமிழ் பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சுகந்தி என்ற பெண்மணி நடுத்தர வயதைக் கொண்டவர் எனவும், மூன்று பிள்ளைகளின் தாயார் எனவும், இவர் அண்மையிலேயே ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு குடியேறியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சுகந்தி விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
லண்டனில் இன்று காலை வீதியில் செல்வோரை தெரியாத அளவிற்கு பனிப்புகார் சூழ்ந்த காலநிலை காணப்பட்டது.
குறித்த பெண்மணி பாதசாரிகளின் நடைபாதையில் வீதியைக் கடந்த போது பஸ் குறுக்கிட்டதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் காலையில் உருவாகியிருந்த பனிப்புகாரே இவ்விபத்துக்கு காரணமாயிருக்கலாம் என விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்த போதிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திலேயே சுகந்தி உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார், விபத்து நடந்த மிச்சம் - லண்டன் வீதி மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.