புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2016

தமிழருக்காக சளைக்காது குரல் கொடுத்தவர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்! இரா.சம்பந்தன்


தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் துணைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக சளைக்காது குரல் கொடுத்தவர் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
காலம் சென்ற மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கள் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1977ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்ட தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் குடும்பம், அரசியல் என இரண்டறக் கலந்து வாழந்தவர்.
அத்துடன், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காகச் சளைக்காது குரல் கொடுத்த ஒருவராவார்.
தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக கைதுசெய்யப்ட்டு அரசியல் கைதியாக திருமதி மங்கையர்க்கரசியும் சிறைவாசம் அனுபவித்தவராவார்.
தான் இளம் சட்டத்தரணியாக தொழில்புரிந்த காலத்திலிருந்தே தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் அவரின் மனைவியுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளேன்.
தமிழரசுக் கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் அனைவராலும் "மங்கை அக்கா" என அன்புடன் அவர் அழைக்கப்பட்டார்.
தமிழ் மக்களின் விடிவுக்காக மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு வந்த அவரது இழப்பு அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் அனைவருககுமே ஒரு பேரிழப்பாகும்.
சத்தியாக்கிரகம் உள்ளிட்ட எமது கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்று செயற்பட்ட துணிச்சல்மிக்க ஒரு பெண்மணியாவார்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad