புதிய தமிழகம் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின்
தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்களிடம், தேர்தல் கூட்டணி குறித்தும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து கேட்டதுடன், தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். ஆனால், எந்த கூட்டணியில் இடம் பெறுவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. வலுவான வெற்றி கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று (சனிக்கிழமை) கட்சியின் நகர, ஒன்றிய செயலாளர்களை சந்தித்து கருத்து கேட்க இருக்கிறார். இன்று அல்லது நாளை கூட்டணி குறித்த முடிவை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.