புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2016

“எங்களை பிரித்துவிட வேண்டாம்; சேர்ந்து வாழ விடுங்கள்” மாணவனுடன் மீட்கப்பட்ட ஆசிரியை உருக்கம்



திருப்பூரில் இருந்து மாணவனுடன் மீட்டு வரப்பட்ட 

ஆசிரியை கோதைலட்சுமியை, நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்கு முன்பாக 



























திருப்பூரில் இருந்து மாணவனுடன் மீட்டு வரப்பட்ட ஆசிரியை கோதைலட்சுமியை, நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அவரிடம் கடையநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
 விசாரணையில், போலீசாரிடம் கண்ணீர் மல்க கோதைலட்சுமி கூறும் போது

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு தென்காசியில் இருந்து மதுரை சென்றோம். நாங்கள் விரும்பித்தான் சென்றோமே தவிர,
யாரும் எங்களை கடத்திச் செல்லவில்லை. மதுரையில் இருந்து சென்னை சென்று, பின்னர் புதுச்சேரி வந்து தங்கினோம். இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் நான் வேலைக்குச் சென்றேன். ஒருவாரம் வேலைக்கு சென்ற நிலையில், எங்களைத் தேடி போலீசார் புதுச்சேரிக்கு வந்திருப்பதாக அறிந்தேன்.
உடனடியாக அங்கிருந்து திருப்பூர் சென்றோம். அங்கு இருவரும் வேலைக்குச் சேர்ந்தோம். மாதச் சம்பளமாக எங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை கிடைத்தது. அங்கு வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம். நான் கர்ப்பம் அடைந்தவுடன், கடந்த 2 மாதங்களாக வேலைக்குச் செல்லவில்லை. இந்தநிலையில்தான் போலீசார் வந்து அழைத்தவுடன் வந்து விட்டோம். நாங்கள் கணவன், மனைவி ஆகிவிட்டோம். எங்களை யாரும் பிரித்து விட வேண்டாம். நிம்மதியாக வாழ விடுங்கள்“ என கண்ணீர் மல்க போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.
விசாரணைக்கு பின்னர் நேற்று இரவில், ஆசிரியை கோதை லட்சுமியை கடையநல்லூர் போலீசார் கைது செய்தனர். மாணவரையும், கோதைலட்சுமியையும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கோதை லட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

ad

ad