முசலி சமூர்த்தி வங்கியில் தாலாட்டுபாடி உறங்கும் அலுவலகர்கள்...........
முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுப்பாரா???????
மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமூர்த்தி வங்கியில் தாலாட்டுப்பாடி உறங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
ஏழை எளிய பாமர மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூர்த்தி பணம் நாடளவீய ரீதியாக வழங்கப்படுவதை நாம் அறிவோம் இதில் பல அரசியல் ரீதியான செல்வாங்கும் காணப்படுவதாக மக்களாகிய நாம் அறிந்த விடயம்.
இந்த பணத்தை பெறுவதற்கு உரிய பயணாளிகள் வரிசையில் நின்று பல மணி நேரம் காத்துகிடந்துதான் பணத்தை பெற்றுக்கொண்டு போகின்றார்கள்.
இவ்வாரான சந்தர்ப்பத்தில் பல நேர மணி நேரம் மக்களை காக்க வைத்து அலுவலகர்கள் கையடக்க தொலைப்பேசியிலும், உறக்கத்திலும் ஆள்ந்திருப்பதை மனித உரிமை செயற்பாட்டாளன் அனைத்து அதிகாரிகளுக்கும் சுட்டிக்காட்டி தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
சமூர்த்தி பெறும் மக்களின் கருத்து...
மக்களுக்கு சமூர்த்தி அலுவலகர்களினால் பணம் கொடுக்கும் நாளை அறிவிக்கின்றார்கள். நாங்களே காலை 8:30மணிக்கு வந்து விடுவோம் அலுவலகர்களோ காலை 9:30 மணிக்கு பிற்பாடுதான் வருவார்கள். வந்து வங்கியை திறந்ததும்
அதிகாரிகள் காலை உணவு உண்பதற்காக சென்று விடுவார்கள்...
பின்பு 11மணியளவில் பணம் கொடுக்க ஆரம்பிப்பார்கள் அது வரைக்கும் மக்கள் காத்துக்கொண்டு நோவா விட்ட காகம் போல் காத்துக்கொண்டு இருப்பதாகவும் சரியாக 12:30மணிக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள் இதற்குள் பல தொலைப்பேசி அழைப்புக்கள், தூக்கம், என மக்களை இவ்வாறாக பல மணி நேரம் காக்க வைப்பதை படம் இட்டு காட்ட முனைகின்றோம்.
பின்பு 11மணியளவில் பணம் கொடுக்க ஆரம்பிப்பார்கள் அது வரைக்கும் மக்கள் காத்துக்கொண்டு நோவா விட்ட காகம் போல் காத்துக்கொண்டு இருப்பதாகவும் சரியாக 12:30மணிக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள் இதற்குள் பல தொலைப்பேசி அழைப்புக்கள், தூக்கம், என மக்களை இவ்வாறாக பல மணி நேரம் காக்க வைப்பதை படம் இட்டு காட்ட முனைகின்றோம்.
இவ்வாறு காலையில் பணம் பெற வரும் மக்கள் பல்வேறு பட்ட துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். சில அதிகாரிகள் மக்களை பேசியும் உள்ளார்கள்..
எனவே அலுவலகர்கள் தங்களின் கடமை நேரங்களை சரியான வகையில் சரிவர பயன்படுத்த வேண்டும், காலை 8:30மணி தொடக்கம் மாலை4:45மணி வரைக்கும் அவர்களின் கடமை நேரம் இந்த நேரங்களில் அலுவலகத்தில் தொடர்ச்சியாக கையடக்கத்தொலைப்பேசிகள், மற்றும் உறங்குதல் போன்ற விடயங்கள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
அலுவலகர்களுக்கு அலுவலகம் தூங்குவதற்கோ அல்லது மக்களை காக்க வைத்து தொலைப்பேசி கதைக்கவோ அல்ல என்பதனை மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்த விடயத்தில் மேல் அதிகாரிகள் அசட்டையாக இருக்க முடியாது அலுவலகர்கள் மட்டில் மேலதிகாரிகளின் கண்காணிப்பு மிகவும் முக்கியமானதாக காணப்பட வேண்டும் ஆனால் இந்த சந்தர்ப்பத்தினை பார்த்தால் மேலதிகாருகளும் இவ்வாரான அலுவலகர்களுக்கு துனைபோகின்றார்கள் என்றுதான் கருதவேண்டிய தேவைப்பாடு உள்ளது.
இதே வேளை சமூர்தி அதிகாரிகள் சிலர் அரசியலை பயன்படுத்தி மக்களை அடக்கியாள முற்படுகின்றார்கள் இதற்கு ஒரு போதும் இனியும் இடமளிக்க முடியாது அவ்வாரான அலுவலகர்களின் முகதிரைகள் அவ்வப்போது வெளிகொணர நாம் ஒரு போதும் தயங்க மாட்டோம்.
எனவே அரச அலவலகங்களில் மேலதிகாரிகளாக பணி புரியும் அதிகாரிகள் இவ்வாரான அலுவலகர்கள் மட்டில் அக்கறையுடனும் கண்காணிப்புடனும் செயற்பட வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் கோரிக்கை விடுக்கின்றேன்.
எனவே ம்க்கள் மத்தியில் சேவை செய்யும் அரச அதிகாரிகள் மக்களுடன் நடந்து கொள்ளும் விதம் மற்றும் தலமைத்துவங்களுக்கு அமைவாக தங்கள் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்ய முன்வரவேண்டு என மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
எனவே இந்த சமூர்த்தி அலுவலகர்கள் மட்டில் பிரதேச செயலாளர் ஒரு சிறந்த விசாரனைகளை மேற்கொண்டு மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளன் சுனேஸ் தெரிவித்துள்ளார்.
நன்றி