புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

வவுனியா, பூங்கா வீதி நெற்களஞ்சியசாலையில்அதிரடிப்படையினர் நேற்று (31) வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலை மற்றும் அலுவலக கட்டடத் தொகுதி கடந்த 23 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெற்களஞ்சியசாலையில் கடந்த 23 வருடங்களாக நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் நேற்று (31) வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான குறித்த கட்டடத் தொகுதி, நெற்களஞ்சியசாலை, அலுவலக கட்டடத் தொகுதி என்பற்றை உள்ளடக்கியதாக காணப்பட்டது
யுத்த காலப்பகுதியில் வவுனியாவில் நிலை கொண்ட விசேட அதிரடிப்படையினர் குறித்த நெற்களஞ்சியசாலையை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால் நெல்லினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவது தொடர்பில் வவுனியாவில் பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டதுடன், அதனை விடுவிக்குமாறு மாவட்ட அரச அதிபர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் அங்கு நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் நேற்று முழுமையாக வெளியேறியுள்ளனர்.
மேலும் அங்கு நிலை கொண்டிருந்த அதிரடிப்படையினர் வவுனியா, மடுக்கந்தைப் பகுதியில் தமது முகாமினை அமைத்துச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விடுவிக்கப்பட்ட களஞ்சிய சாலையை வவுனியா மாட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, விவசாய அமைச்சின் மாவட்ட பணிப்பாளர் திருமதி எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதில் நெல்லினை களஞ்சியப்படுத்துவது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.

ad

ad