புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

மைத்திரி அரசுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா விமான சேவை


ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தற்போது பாரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ராஜாங்க அமைச்சராக சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமான சேவை மீட்டெடுப்பதற்காக வெளிநாடுகளின் ஆதரவினை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது வரையில் முகம் கொடுத்துள்ள பாரிய கடனுக்கு மேலதிகமாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அடைந்திக்கும் 128 பில்லியன் நட்டுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்திருந்த சர்வதேச வர்த்தக நடவடிக்கை தொடர்பிலான ராஜாங்க அமைச்சராக சுஜீவ சேனசிங்க இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு மூலதனம் மூலமாக அல்லது வெளிநாட்டு விமான நிறுவனத்துடன் மேலாண்மை ஒப்பந்தத்தினால் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பு செய்யவது அவசியம் என ராஜாங்க அமைச்சர்  இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
அந்த நடவடிக்கை 2 அல்லது 3 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலாண்மை ஒப்பந்தத்திற்காக கொழும்பு அதிகாரிகள், மத்திய கிழக்கு விமான நிறுவனங்களுடன் தற்போது கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களின் உத்தியோகபூர்வ தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கம் மற்றும் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு இடையில் காணப்பட்ட மேலாண்மை ஒப்பந்தம் ஒன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட நடவடிக்கை காரணமாக 2008ஆம் இல்லாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad