புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

யோஷிதவின் மற்றும் ஒரு மோசடி அம்பலம்! நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தொடர்பில் மேலும் பல மோசடி  குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெஹிவளை மிஹிந்து மாவத்தையில், 173/2 எனும் முகவரியில் அமைந்துள்ள நான்கு மாடி  கொண்ட ஆடம்பர வீடு மற்றும் இரு மாடி வீடு ஆகியன தொடர்பிலேயே இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்கிஸ்ஸ மஜிஸ்ட்ரேட் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த வீடு அமைந்துள்ள காணியை கொள்வனவு செய்வதற்கு மாத்திரம் 4 கோடி 90 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வீடு அமையப் பெற்றுள்ள காணியின் முழுமையான அளவு 65 பேர்ச்சர்ஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 37 பேச்சர்ஸ் காணி யோஷித்த ராஜபக்ஷவின் பெயரில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், தெஹிவளை கல்கிஸ்ஸ பலநோக்குக் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான காணியில் 5 பேச்சர்ஸ் காணியொன்றும் 45 லட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை. குறித்த வீட்டின் பெறுமதி இதுவரை மதிப்பிடாத நிலையில், சுமார் 1000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
யோஷித்த ராஜபக்ஸவை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு பிரசன்னமாகுமாறு நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகுமாறு கல்கிஸ்ஸை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 18ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு பிரசன்னமாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் 5ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் யோஷித்த ராஜபக்ஸவை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், யோஷித்த ராஜபக்ஸவின் சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுக்கோளுக்கு அமைய, குறித்த திகதியை மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ad

ad