புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

தமிழ்மக்களின் பிரதிநிதிகளின் கருத்தை நிராகரித்தால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும்

ரூ.21இலட்சம் வீட்டை அமைப்பது தொடர்பில் தமிழ்மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுமனே மக்களிடம் விண்ணப்பங்களை திணிப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் விண்ணப்பங்களை நிரப்பி தருவார்கள். மக்கள் விரும்புகிறார்கள் அதனால் செய்கிறோம். என்று தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை நிராகரித்தால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும். எனவே உடனடியாக அரசு மீள்பரிசீலனை செய்து தலா ஒருவருக்கு 10லட்சம் கொடுத்தால் அவர்கள் தமக்கு பொருத்தமான வீடுகளை அமைப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

உரும்பிராயில் அமைக்கப்பட்ட 21இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருத்து வீட்டை பார்வையிட்ட பின்னர் சிறீதரன் எம்.பி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

21இலட்சம் பொருத்து வீடு சூழலுக்கேற்றவாறு அமைந்ததாக இல்லை. தமிழர்கள் வாஸ்து பார்த்து வீட்டுத்திட்டங்களை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை கொண்டவர்கள். இந்த வீடு சுகாதார முறை கொண்டதாகவோ அல்லது நீண்ட காலம் பாவனை கொண்டதாகவோ இல்லை. 

போரினால் பாதிக்கப்பட்ட மீள்குடியேறிய மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். வெளிநாடுகள் குறிப்பாக உலக நாடுகள் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இவ்வாறான திட்டங்களை இலவசமாக வழங்குகின்ற போது ஆணவத்தன்மையோடும் சர்வாதிகார தொனியோடும் அமைச்சர் சுவாமிநாதன் அமைத்தே தீருவோம் அதற்கு மைத்திரியும், ரணிலும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்று செய்தி பரப்புவது அதிகார உச்ச வரம்பை காட்டுகின்றன. இது ஆரோக்கியமான நல்லாட்சியாக அமையாது.

மேலும் ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்காகவும், அல்லது தங்களுக்கான சாதகமான நிலைமையை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற முனைந்தால் அது பாரதூரமானதாக அமையும் என்றார்.

ad

ad