புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2016

இலங்கையை தாக்க இருக்கும் ஆபத்து! காலநிலையில் மாற்றங்கள்

எதிர்வரும் நாட்களில் காலநிலையில் ஏற்படும் மாற்றத்தினால் இலங்கை உட்பட தென்னிந்தியாவிலும் வெள்ள அனர்த்தம்
ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக காலநிலை தொடர்பான ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆய்வு மையம் கருத்து வெளியிடுகையில்,
வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் காற்றழுத்தம், தீவிரம் அடைந்து இலங்கைத் தீவு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரக் கூடிய சாத்தியபாடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் இலங்கைத் தீவு முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின் தாக்கம் தீவிரமாக இருக்கும்.
முன்னதாக நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடும் பழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad