புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாயும் மகனும் ரயில் விபத்தில் பலி!
அம்பலாங்கொட, ரயில் கடவையில் நேற்று முன்தினம்
மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
ரயில் கடவை காவலாளியின் ஆணையை மீறி ரயில் வருவதை அவதானித்து கொண்டே குறித்த பெண் கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்டபோது மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த கடுகதி ரயிலால் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் உதயங்கனி கோமஸ் என்ற 28 வயதான பெண்ணும் சமித் என்ற 6 வயதான அவரது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வெளிநாடொன்றில் வசித்து வந்திருந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு குறித்த இலங்கை வந்துள்ளனர் எனவும் புத்தாண்டுக்காக ஆடைகள் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் இலங்கை வருவதற்காக புறப்பட்டு விமானத்தில் வந்து கொண்டிருந்த வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் அவர் இலங்கையை வந்தடையும் வரை தனது மனைவியும் மகனும் உயிரிழந்தமை தொடர்பில் அறிந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.


