புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2016

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து- உயிர் தப்பிக்க போராடிய பயணிகள்! (வீடியோ)


பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் உயிர் தப்ப
போராடும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே மிகவும் அபாயகரமான காரகோரம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சம்பவத்தன்று இந்த நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று அந்த வழியாக கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. தொடர் மழை காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கு வந்த போது திடீரென்று வெள்ளம் அப்பகுதியை சூழ்ந்ததாகவும், இதை எதிர்பார்க்காத ஓட்டுனரால் பேருந்தை நிறுத்த முடியாமல் போனதாகவும், அதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்வத்தால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உயிர் தப்பிக் ககடுமையாக போராடியுள்ளனர். இறுதியில் பேருந்தின் ஜன்னலை உடைத்து அதுவழியே அனைத்து பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர்.

காரகோரம் மலைப்பகுதியைச் சுற்றி பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகளை இந்த நெடுஞ்சாலை இணைக்கின்றது. உலகில் மிகவும் ஆபத்தான நெடுஞ்சாலைகளில் இதுவும் ஒன்றுஎன கூறப்படுகிறது.

இதுவரை இந்த நெடுஞ்சாலையில் பெருவெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவிபத்துகளில் சிக்கி பாகிஸ்தானியர்கள் 810 பேரும், சீனர்கள் 82 பேரும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad