புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2016

சமஷ்டி தீர்வுக்கு ஜேர்மன் ஆதரவு! கூட்டமைப்பிடம் அந்நாட்டு நாடாளுமன்றக் குழு தெரிவிப்பு!

இலங்கையின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு, சமஷ்டியைத் தீர்வாக முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு ஜேர்மன் அரசு உறுதுணையாக இருக்கும் என்று அந்த நாட்டு நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. 

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மனிய நாடாளுமன்றக் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை, எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். 

இந்தக் கலந்துரையாடலின்போதே, ஜேர்மன் நாட்டு நாடாளுமன்றக் குழுவினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அது மிகவும் முக்கியமானது. இந்த நல்லாட்சியில் அது நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்து வருகின்றது. 

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டத்திற்கே, கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையினூடாக மக்களின் ஆணையைப் பெற்றிருக்கின்றது. இதனடிப்படையிலேயே தீர்வு காண்பதற்கு கூட்டமைப்பு விரும்புகின்றது. தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மக்களின் மீள்குடியமர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட வேண்டும். 

இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும். காணாமல் போகச் செய்யப்பட்டோர் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த அடிப்படை அன்றாடப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஜேர்மனிய நாடாளுமன்றக் குழுவினர், சமஷ்டி அடிப்படையிலான தீர்வை எட்டுவதற்கு தமது நாடும் உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு ஜேர்மனிய அரசு உதவி வழங்கும் என்றும் அந்த நாட்டுத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad