புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2016

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார் வடமாகாண முதல்வர்

வடமாகாண முதவல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து
கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பானது எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று (செவ்வாய்கிழமை) வடமாகாண சபையில் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணசபையின் 49வது அமர்வு இன்று நடைபெற்றபோது, வடமாகாண அமைச்சர் ரவிகரன், சட்டவிரோத காணி சுவீகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு குறித்த பிரேரணை ஒன்றை வடமாகாண சபையில் முன்வைத்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நில அளவைக் குறித்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் இன்றைய அமர்வின் போது சுட்டிக்காட்டினார்.
இவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதியும், பிரதமரும் தங்களை சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும், எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பில் இருவரையும் சந்திக்கவுள்ளதாகவும், இதன்போது இந்த பிரச்சினைகள் குறித்து அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படும்’ என்றும் கூறினார்.
எனவே ‘வடமாகாண சபை உறுப்பினர்கள் காணி சுவீகரிப்பு, இராணுவ அத்துமீறகள் குறித்த தகல்களை தன்னிடம் ஒப்படைக்குமாறும்,’ முத லமைச்சர் வடமாகாண சபை உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.

ad

ad