புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2016

குணமடைந்ததை உறுத்திப்படுத்தாமல், கிரிக்கெட் சபையின் அனுமதியை பெறாமல் மாலிங்க விளையாட முடியாது

காயத்திலிருந்து பூரண குணமடைந்து விட்டதை உறுதிப்படுத்தாமல், இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியைப் பெறாமல் லசித் மாலிங்க ஐ.பி.எல்
. போட்டிகளில் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமிதிபால தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆசியக் கிண்ணத் தொடரில் முதல் போட்டியுடன் காயம் காரணமாக விலகிக்கொண்டார். ஆனால் உலகக் கிண்ணத் தொடரில் 15 ஆம் திகதிக்கு பின்னர் பங்கேற்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனையடுத்து அவருடைய அனுமதியுடனே நாம் அணியில் சேர்த்துக்கொண்டோம். மாலிங்க கூறவது போன்று வற்புறுத்தி அணியில் சேர்த்துகொள்ளவில்லை.
அவர் உலகக் கிண்ணத் தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை.  ஏதாவது ஒரு போட்டியில் விளையாடி இருந்தால் கூட நாம் அரையிறுத்திக்குள் நுழைந்திருப்போம். ஆனால் அவர் ஒன்றையும் செய்யவில்லை.
ஏஞ்சலோ மெத்தியூஸ் காயத்துடனே களமிறங்கி இருந்தார். காயத்தின் மீது மருந்து தூசிகளை போட்டுக் கொண்டே விளையாடினார். அணியை வெற்றி பெறச் செய்ய கடுமையாக போராடினார். இவர் போன்ற வீரர்களே நாட்டுக்கு தேவை.
மேலும் மாலிங்க திடீரென ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது. தான் குணமடைந்ததை உறுதிப்படுத்தி அதை கிரிக்கெட் சபை அங்கீகரித்தால் மாத்திரமே விளையாட முடியும். அதைவிடுத்து எந்தவொரு போட்டிகளிலும் விளையாட முடியாது என்றார்.

ad

ad