தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள். வைகோவின் பிடிவாதத்தால் விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்ததால், கடுப்பில் இருக்கிறார்கள் தலைவர்கள்.
மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா இணைந்ததையடுத்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல் போட்டியிடும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில், கடந்த இரண்டு நாட்களாக முட்டி மோதி வருகின்றனர் கூட்டணியின் ஆறு தலைவர்களும். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இன்று அதிகாலை 2 மணியைக் கடந்தும் தொகுதியை முடிவு செய்ய முடியாமல் தவித்துள்ளனர் கூட்டணிக் கட்சித் தலைவர்கள். 'வைகோவின் பிடிவாதம்தான் தொகுதிகள் இழுபறிக்கு முழுக் காரணம்' எனக் குற்றம் சாட்டுகின்றனர் மக்கள் நலக் கூட்டணியினர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கூட்டணிக் கட்சியின் நிர்வாகி ஒருவர், " ஜி.கே.வாசனுக்கு 26 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்தபோது, விஜயகாந்த், திருமா உள்ளிட்டவர்கள் தங்களிடம் இருந்த சீட்டுகளை பிரித்து த,மா.காவுக்கு ஒதுக்கினர். தலைவர்களின் பெருந்தன்மையால் வாசன் ரொம்பவே மகிழ்ந்து போனார். தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் வந்தாலும், சிந்தாமல் சிதறாமல் கூட்டணியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் விஜயகாந்த், வாசன், திருமா உள்ளிட்டவர்கள் உறுதியாக நிற்கின்றனர். இதே நிலைப்பாடுதான் சி.பி.எம் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணனுக்கும், சி.பி.ஐ கட்சியின் முத்தரசனுக்கும். ஆனால், வைகோ என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதையே புரிந்து கொள்ள முடியவில்லை. தே.மு.தி.க, சி.பி.எம் வெற்றி பெற்ற சிட்டிங் தொகுதிகளிலேயே வைகோ குறியாக இருந்தார். இத்தனைக்கும் கூட்டணியின் செல்வாக்கான கட்சியாக தே.மு.தி.க இருக்கிறது. அடுத்தபடியாக, சி.பி.எம்மும், சி.பி.ஐயும் இருக்கின்றன. இந்த மூன்று கட்சிகளுக்கும் சட்டமன்றத்தில் போதுமான எண்ணிக்கையில் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அப்படி எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. இதை உணர்ந்து வாசன், திருமா உள்ளிட்டவர்கள் தங்களுக்கு பலம் வாய்ந்த தொகுதிகளை மட்டும் கேட்டு பெறுகின்றனர். அடுத்த கட்சியின் சிட்டிங் தொகுதிக்குள் கால் வைக்க நினைக்கவில்லை.