7 மே, 2016

சரத்குமார் காரில் இருந்து ரூபாய் 9 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சரத்குமார் காரில் இருந்து ரூபாய் 9 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் போட்டியிடுகிறார். இதற்காக அத்தொகுதியில் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி சாலையில் நல்லூர் அருகே அவர் காரில் வந்தபோது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் ரூபாய் 9 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் திருச்செந்தூர் கோட்டாட்சியர் மூலம் அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.