புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2016

சசிகலா உறவினர் வீட்டில் அதிரடி சோதனை! பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? ( படங்கள் )


திருவாரூர் மாவட்டம்  முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லி கிராமம் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் சசிகலாவின் தாய்மாமன் தங்கவேலு.  இவரது மகன் பி.ஏ.டி.அன்பழகன்.  இவருக்கு அப்பகுதியில் எராளமான விவசாய நிலங்கள் உள்ளன.   விவசாயப் பணிகளை கணக்காளர்கள் கொண்டு மேற்கொண்டு வந்தார். இவருக்கு தஞ்சை மற்றும் சென்னையில் வீடுகள் உள்ளன. பெரும்பாலான நாட்கள் இவர் சென்னையில் தங்கியிருப்பார்.  அவ்வப்போது சித்தமல்லிக்கு வந்து விவசாய பணிகள் மற்றும் கணக்குகள் குறித்தும் கேட்டறிந்து செல்வார். thx nakkeeran 

    இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை சித்தமல்லி பாலகிருஷ்ணபுரத்தில் உள்ள பி.ஏ.டி அன்பழகன் வீட்டிற்கு வந்த வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மத்திய வருமான வரித்துறை துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் திருவாரூர் வருமானவரித்துறை அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பெருகவாழ்ந்தான் சப் - இன்ஸ்பெக்டர் மோகன், பறக்கும் படை சப் - இன்ஸ்பெக்டர் வேதரெத்தினம் தலைமையில் எராளமான போலீசார் மற்றும் மத்திய துணை ராணுவத்தினர் வீட்டை சுற்றியும் பாதுக்காப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.  சுமார் 3-மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு வெளியே வந்த அதிகாரிகளிடம்  வெளியில் காத்திருந்த பத்திரிகையாளர்கள் கேட்டபோது எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் காரில் ஏறி சென்றனர்.  

இந்த சோதனையின் போது பி.ஏ.டி அன்பழகனின் மகன் கனகவேல்ராஜ் மட்டும் இருந்தார். இந்தநிலையில் சசிகலாவின் உறவினரான பி.ஏ.டி அன்பழகன் வீட்டில் வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் வழங்குவதற்கு அதிக அளவில் பணம் பதுக்கப்பட்டிருந்ததாக வந்த ரகசிய தகவலின்படி இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் ஏதேனும் சிக்கியதா? என்ற தகவல் மர்மமாக உள்ளது. இந்த சோதனையின் காரணமாக சித்தமல்லி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்  பரப்பரப்பாக காணப்பட்டன.



ad

ad