7 மே, 2016

விக்கினேஸ்வரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஐதேக!

பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் ஏற்பட்டு வரும் இழுபறி நிலைக்கு எதிராகவும், தாண்டிக்குளம் விவசாய
பண்ணைக் காணியை அதனை அமைப்பதற்கு வழங்கக் கோரியும் உள்ளூர் விளைபொருள் விற்பனையாளார் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெறவுள்ளது.
நாளை காலை 9 மணிக்கு மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் இப்பேரணி மாவட்ட செயலகத்தை வந்தடையவுள்ளது.
குறித்த பேரணி வடமாகாண முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே மேற்கொள்ளப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாம் அனுசரணை வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா கிளையினர் ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளதுடன், நாளை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை, நாளைய ஆர்ப்பாட்டத்த்திற்கு மக்களை திரட்டுவதற்கான முயற்சியிலும் ஐ.தே.கட்சி ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.