புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 மே, 2016

நினைத்ததை செய்து முடித்தோம்: குஷியில் குதிக்கும் ரொனால்டோ

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)- மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள்
இடையிலான அரையிறுதியின் 2வது சுற்று போட்டி மாட்ரிட் நகரில் உள்ள சான்டியாகோ பெர்னபியு அரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி 14வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்த வெற்றி குறித்து ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கூறுகையில், இது மிகவும் கடினமான போட்டியாக இருந்தது. ஆனால் ரியல் மாட்ரிட் அந்த அணியை விட சிறப்பாக ஆடியதாக நினைக்கிறேன். நாங்கள் கோலுக்கு ஏற்ற வாய்ப்புகளை அதிகம் உருவாக்கினோம்.
எங்களுக்கு கோலுக்கு பிறகு சிட்டி அணி நெருக்கடி கொடுக்கும் என்பது எங்களுக்கு தெரியும். இருப்பினும் அந்த நிலையை சமாளித்து விட்டோம்.
எங்கள் அணி சிறப்பாக இருந்தது. எதை செய்ய வேண்டும் என நினைத்தோமே அதை செய்துவிட்டோம். இப்போது இறுதிப் போட்டியில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், காயம் பற்றி அவர் கூறுகையில், நான் 100 சதவீத உடற்தகுதியுடனே இருந்தேன். அணிக்காக முடிந்ததை செய்தேன். தற்போது நாங்கள் இறுதிப் போட்டியில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.